பொதுவாக எலிகளின் ஆயுள்காலம் அதிகபட்சம் 2 வருடங்கள் தான். எனினும் கலிபோர்னியாவிலுள்ள சான்டியாகோ எனும் உயிரியல் பூங்காவில் சுமார் 9 வருடங்கள் மற்றும் 5 மாதங்கள் வாழ்ந்த ஒரு எலி கின்னஸ் சாதனையில் இடம்பெறுகிறது. இது உலகில் வாழ்ந்த எலிகளில் அதிகளவு வயதுடைய எலி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எலி குறித்த விஷயங்கள் சமூகஊடகங்களில் வைரலாகி வருகிறது. சான் டியாகோ மிருகக்காட்சி சாலையில் 9 வருடங்களுக்கு முன்பு பிறந்த பசிபிக் பாக்கெட் எலி தற்போது உலகிலேயே மிக வயதான எலி என நம்பப்படுகிறது. தற்போது பசிபிக் பாக்கெட் எலிக்கு கின்னஸ் உலகசாதனை அங்கீகாரம் கிடைக்கப்போவதாக அந்த உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.