அமெரிக்க நாட்டில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த பலர் பல முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 எம்.பி.க்கள் ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமிபெரா, பிரமிளா ஜெயபால், ரோகண்ணா ஆகியோர்கள் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் நால்வரும் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் முக்கிய குழுக்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இது அமெரிக்க நாட்டினுடைய அரசியலில் இந்திய வம்சாவளியினர் அடைந்து வரும் செல்வாக்கை குறிக்கின்றது.
இதனை அடுத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் சபையின் சீனாவுக்கான ரேங்கிங் உறுப்பினராக ராஜா கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் சீன நாட்டின் நடத்தை மற்றும் அமெரிக்காவுக்கும் உலகத்திற்கும் எதிராக சீனாவின் அச்சுறுத்தல்கள் போன்றவற்றை கவனிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளார்.
அடுத்ததாக அமிபெரா முக்கியத்துவம் வாய்ந்த பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவானது தேசிய புலனாய்வு இயக்குனரகத்தின் அலுவலகம், மத்திய புலனாய்வு அமைப்பு, பாதுகாப்பு முகமை மற்றும் ராணுவ உளவுத்துறை போன்ற நாட்டின் உளவுத்துறை அமைப்புகளை மேற்பார்வையிடும் பணியாகும்.
இதனை தொடர்ந்து பிரமிளா ஜெயபால் பிரதிநிதிகள் சபையின் நீதித்துறை குழுவில் ரேங்கிங் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கொடியேற்ற துணை குழுவுக்கு தலைமை தாங்குவார் என கூறப்பட்டுள்ளது.
அதன்பின் ரோகண்ணா சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனான அமெரிக்காவின் பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, போட்டி போன்றவை தொடர்பான புதிய குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.