“ஒரு கல் ஒரு கண்ணாடி” உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முதல் படம் ஆகும். அதே நேரம் இந்த படம் நடிகை மதுமிதாவுக்கு ஒரு வெற்றிப் படமாக அமைந்தது. இவர் சந்தானம் ஜோடியாக இந்த படத்தில் நடித்திருப்பார். இதையடுத்து அட்டகத்தி, ராஜா ராணி, காக்கி சட்டை, காஞ்சனா 2, டிமான்டி காலணி உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் மதுமிதா.

சென்ற வருடம் மதுமிதா நடிப்பில் காட்டேரி திரைப்படமானது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜாங்கிரி மதுமிதாவுக்கு கடந்த 2019 ஆம் வருடம் தன் நெருங்கிய உறவினரான மோசஸ் ஜோயல் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அதன்பின் கடந்த வருடம் மே மாதம் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் மதுமிதா மகனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.