சென்னை பசுமை வழிச் சாலையிலுள்ள தன் இல்லத்திலிருந்து தேனி செல்வதற்காக புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் கலந்துகொள்வீர்களா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் கண்டிப்பாக அனைவரிடமும் கூறிவிட்டு தான் பிரச்சாரத்திற்கு செல்வேன் என கூறினார்.

அதன்பின் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது “தலைமை முடிவெடுத்து ஈரோடு இடைத்தேர்தலில் என்னை போட்டியிட சொன்னார்கள். தற்போது தலைமை என்னை வாபஸ் பெற கூறுகிறார்கள். தலைமையின் முடிவுக்கு நான் கண்டிப்பாக கட்டுப்படுவேன். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற பாடுபடுவேன்” என அவர் தெரிவித்தார்.