ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் விதிமீறல்கள் பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்பதுரை போன்றோர் வீடியோ ஆதாரங்களுடன் நேரில் சந்தித்து புகாரளித்தனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “திமுக அரசு இயந்திரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தாமல் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சி செய்து தவறாக பயன்படுத்தி வருகிறது.

பணத்தை வாரிவாரி செலவழித்து ஒட்டுமொத்த அமைச்சர்களும் திமுகவினர்களும் அங்கே முகாமிட்டு செயலாற்றி வந்தாலும் அ.தி.மு.க அங்கு அமோக வெற்றி பெறும். இதற்கிடையில் அரசியலில் எது நடந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு நடக்கவே நடக்காது. ஓபிஎஸ் தொடர்ந்து தி.மு.க-வின் பி டிமாகவே செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இரட்டை இலையை முடக்க முயற்சி மேற்கொண்டு முடியாத நிலையில், இவ்வாறான பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது” என்று பேசினார்.