ஆந்திரா குருகிராம் பகுதியில் வசித்து வருபவர் சாகுல் குப்தா(31). இவருக்கு காதலி யாரும் இல்லாததால் தனிமையில் தவித்து வந்திருக்கிறார். அப்போது வித்தியாசமாக ஏதாவது செய்து அதன் வாயிலாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் சாகுல் குப்தாவுக்கு தோன்றியுள்ளது. அதன்படி தன்னைப் போல் காதலன் இன்றி தவிக்கும் பெண்களுக்கு உதவும் அடிப்படையில் தன் சேவையை செய்ய முன் வந்தார். அந்த வகையில் கடந்த 2018ம் வருடம் “வாடகைக்கு பாய் ப்ரெண்ட்” என சமூகவலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.

அதில், காதலன் இன்றி தனிமையில் தவிக்கும் பெண்களுக்கு தான் சேவை செய்வதாகவும் அதற்காக நாளொன்றுக்கு இவ்வளவு தொகை என கட்டணம் நிர்ணயித்து பதிவிட்டார். அதன்பின் கட்டணம் செலுத்தும் பெண்களுடன் அரட்டை அடிப்பது, சமையல் செய்வது, பார்க் பீச் என அவர்கள் விரும்பும் சேவையை செய்வதாக தெரிவித்திருந்தார். பெண்களுடன் பழகுவதற்கு நாளொன்றுக்கு ரூ.1000 வரை கட்டணமாக வசூலித்து வந்துள்ளார் சாகுல் குப்தா. கடந்த 2018 ஆம் வருடம் முதல் சாகுல் குப்தா இதுவரையிலும் 50 பெண்களுக்கு சேவை செய்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.