மராட்டியத்தின் சத்தாரா மாவட்டத்தில் முந்தே எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஷ்லோக் அரவிந்த் மாலி(3), இவனது சகோதரி தனிஷ்கா அரவிந்த் மாலி (7) என்ற குழந்தைகள் பெற்றோருடன் வசித்து வந்ததனர். இந்நிலையில் சிறுவனுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டதால் அவரது பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான். இதனையடுத்து சிறிது நேரத்தில் தனுஷ்காவிற்கும் உடல்நல குறைவு ஏற்பட்டு வாந்தியும் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனுஷ்காவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து வெளியான பிரேத அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சிறுவனுக்கு அதிக அளவு ரத்தப்போக்கு மற்றும் நீர் இழப்பு போன்றவை உயிரிழப்பு ஏற்படுவதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. மேலும் சிறுமியின் பரிசோதனை முடிவு வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து வீட்டில் தானியக்கிடங்கில் இருந்த பூச்சிக்கொல்லி பொடியை அவர்கள் எடுத்து சாப்பிட்டு இருக்கக்கூடும் என குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.