மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில்  வன்ய ஜெகன் கொர்டி(39) என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி லட்சுமி பாய். இந்நிலையில் ஜெகன் வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் கடந்த 2013 ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் 2013 செப்டம்பர் 22-ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டதால் லட்சுமி பாய் இனி உங்களுக்கு சமய உணவு சமைக்க மாட்டேன் என அவரது கணவரிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெகன் வீட்டிலிருந்த மரக்கட்டையை எடுத்து மனைவியின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த லட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து லட்சுமி பாய் கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீச ஜெகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு தானே மாவட்ட கோர்ட்டில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த கோர்ட் மனைவியை கடுமையான தாக்கிய கணவரை குற்றவாளி என அறிவித்தது. மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 10 வருட சிறை தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெகனை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்