கேரளா வயநாடு தொகுதியின் எம்பியாக இருந்து வருபவர் ராகுல் காந்தி. இந்நிலையில் ராகுல் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வண்டூர் அரசு மருத்துவமனைக்கு டயாலிசிஸ் கருவியை வழங்கினார். ஆனால் ரூபாய்.50 லட்சம் மதிப்பிலான இக்கருவியை ஏற்க மருத்துவமனை டாக்டர்கள் மறுத்துவிட்டனர்.

அதோடு அந்த கருவிகளும் திருப்பி அனுப்பப்பட்டது. இது தொடர்பான தகவல் வெளியானதும் காங்கிரசார் அதிர்ச்சியடைந்தனர். டயாலிசிஸ் கருவி திருப்பி அனுப்பப்பட்டதால் நோயாளிகள் பாதிப்புக்குள்ளானதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 17-ஆம் தேதிக்குள் இதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.