ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி வாரியத்தால் மாதம் தோறும் ஊழியர்கள் தங்களுடைய சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை சேமிப்பாக செலுத்தி வருகிறார்கள். ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் சார்பாகவும் குறிப்பிட்ட தொகை இதில் வரவு வைக்கப்படுகிறது. இந்தத் தொகை ஊழியர்களின் எதிர்பாராத மற்றும் திடீர் செலவுகளுக்கு கிளைம் செய்து கொள்ளலாம். இதுவரை 277 மில்லியன் பேர் EPFO அமைப்பில் சுமார் 20 லட்சம் கோடி தொகையை செலுத்தியுள்ளனர். சமீபத்தில் இ பி எஃப் ஓ அமைப்பிடம் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சராசரியாக 20 நாட்களுக்குள் பிஎப் தொகையை விடுவிக்க எடுத்துக் கொள்ளும் அமைப்பு தற்போது அதை தாண்டிய பிறகும் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாமல் உள்ளது. அதனைப் போலவே கடந்த ஆண்டில் 73.87 லட்சம் pf கோரிக்கைகள் வைக்கப்பட்டது 33.8% அதாவது 24.93 லட்சம் அணுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 46.66 லட்சம் மனுக்களுக்கு மட்டுமே தீர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.