வீடியோ மோகம் இளைஞர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பொது இடங்களில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி மெட்ரோ நிர்வாகம் மெட்ரோ ரயிலில் வீடியோ எடுப்பதற்கு தடை விதித்துள்ளது. சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் வீடியோ எடுக்க தடைவிதித்துள்ளது.

விரைவில் இது சென்னையிலும் அமல்படுத்தப்படும் என தெரிகிறது. இதனிடையில் மெட்ரோ ரயில்களில் போகும் ஒரு சிலர் சமூகவலைதள பக்கங்களுக்காக வீடியோ எடுத்து சகபயணிகளுக்கு தொந்தரவு கொடுப்பதாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.