கல்லூரி, பல்கலைக்கழகம் மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறையை கேரள அரசானது கட்டாயமாக்கியிருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை அம்மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டது. அந்த வகையில் மாநில உயா்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அனைத்து பல்கலைகளிலும் பயின்று வரும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன்னதாக அம்மாநிலத்திலுள்ள கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இந்த விடுமுறை நடைமுறையை அறிமுகம் செய்தது. பீகாரிலும் இது போன்ற நடைமுறை கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு மாதத்தில் 3-4 நாட்கள் மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்கள் ஆகும். அப்போது மாணவிகளின் உடல் நிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மாணவிகள் கல்லூரி வர முடியாது சூழல் உருவாகுவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.