கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டதால் காட்டு யானைகள் உள்ளிட்ட விலங்குகள் தண்ணீரைத் தேடி கூட்டம் கூட்டமாக தேயிலை தோட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் வனப்பகுதியில் உலா வருகிறது. இதனால் தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, எந்த நேரத்திலும் காட்டு யானைகள் இடம் பெயர்ந்து செல்லும். இதனால் கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எஸ்டேட் பகுதி மக்கள் இரவு நேரத்தில் மட்டும் இல்லாமல் பகலிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எஸ்டேட் நிர்வாகிகள் தொழிலாளர்களை பணிக்கு அனுப்புவதற்கு முன்பு வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளதா என்பதை உறுதி செய்து விட்டு அனுப்ப வேண்டும் என கூறியுள்ளனர்.