தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் கடைவீதியில் முக்கிய பகுதியில் உள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதி சிமெண்ட் காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது. இந்த மின்கம்பத்தில் இருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீண்ட நாட்களாக அந்த பகுதி பொதுமக்கள் மின்கம்பத்தை மாற்றி புதிதாக மின்கம்பம் நட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் மின்வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கவலை தெரிவிக்கின்றனர். இந்த மின் கம்பத்தினால் எந்த நேரத்திலும் மின்விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக சேதமடைந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை உடனடியாக மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.