
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேர்தல் நேரம் என்று இல்லை… முகூர்த்த நேரம் என்று இல்லை…. சுப முகூர்த்த நேரம்ன்னு இல்லை…. எந்த நேரத்தில் வேணாலும் ஒரு நாட்டின் ஒரு பகுதி இழைக்கப்பட்டது என்ற விஷயத்தை பேசுவதற்கு முகூர்த்தம் தேவை இல்லைங்க. அதனால தயவு பண்ணி தேர்தல் நேரம்….
தேர்தல் நேரம் என்று சொல்றவங்க எல்லோரும் அந்த கேள்வியை மனசுல இருந்து எடுத்துருங்க.. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த நாட்டினுடைய சுதந்திரம், அந்த நாட்டினுடைய அதிகாரம் இருக்கக்கூடிய பூமி இதைப்பற்றி பேசுவதற்கு உரிமை உங்களுக்கும் இருக்கு, எனக்கும் இருக்கு. நாம் பேசுவோம்…
நீங்க கேட்கிற கேள்விக்கு வரேன்… இப்ப பத்து வருஷமா என்ன பண்றீங்க அத பத்தி என கேட்குறீங்க ? ரெண்டு கோர்ட்ல ரீட் பெட்டிஷன் இருக்குது.. ரெண்டு ரீட் பெட்டிசன் சுப்ரீம் கோர்ட்ல இருக்குது..
கச்சதீவு விவகாரத்தில் அதுல மத்திய அரசு நிலைப்பாடு என்ன ? என்ற கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
அந்த பெட்டிஷன் ஹியரிங்குக்கு வரட்டும். அதுல பேசுவோம். என்ன பண்ணுவோம் என்ற கேள்விக்கு, வரட்டும் வரட்டும்… வரட்டும்… கேஸ் வரட்டும் என்று மழுப்பலான பதில் அளித்தார்.