தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா 3 தலைமுறையுடன் இணைந்து இசையமைத்து உள்ளார். இதுவரையிலும் 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார். அண்மையில் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்பியாக அறிவிக்கப்பட்டார். அதோடு சில நாட்களுக்கு முன் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.

இந்த நிலையில் இளையராஜாவுக்கு சாதி அடிப்படையில் எம்பி பதவி வழங்கப்பட்டு இருப்பதாக சீமான் விமர்சித்து உள்ளார். இதுபற்றி சீமான் அளித்த பேட்டியில், மாநிலங்களவை எம்பி பதவி வழங்கும் போது ஈடு இணையற்ற இசை கலைஞனுக்கு கொடுத்தோம் என குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதில் தலித்திற்கு கொடுத்தோம் என சொல்கிறீர்கள். இவ்வளவு உயரத்துக்கு வந்தும் அந்த சாதி இழிவு ஒழியவில்லை என மத்திய அரசை விமர்சித்து உள்ளார்.