தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் சென்ற 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் “தசரா”. ஸ்ரீகாந்த் ஒடேலா டைரக்டு செய்யும் இந்த படத்தில் ஹீரோயினியாக கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். அதோடு பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய்குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உட்பட பலர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிய இத்திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்து வருகிறது.

இந்த நிலையில் தசரா படத்தில் இடம்பெற்ற சில்க் பாரில் நடிகை சில்க் ஸ்மிதா உருவம் வரையப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு கீழே நின்று அவரை போன்று போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தன் சமூக வலைதளப்பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். அதோடு “செட் அகற்றப்படுவதற்கு முன் ஓடிச்சென்று இந்த ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொண்டேன். உங்கள் எல்லோருக்கும் தெரியும் எனக்கும் சில்க் பாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என அவர் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.