பிரபல பாடகி ரமணியம்மாள் இன்று
காலமானார். முதல்முதலாக ‘காதல்’ படத்தில் ‘தண்டட்டி கருப்பாயி’ பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், சூர்யாவின் காப்பான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும், முன்னணி சீரியல்களிலும் பாடியுள்ளார். ரமணியம்மாவின் பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவரது மறைவிற்கு சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.