
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், என்னிடம் கூட அன்பு அண்ணன் சண்முகவேல் அவர்கள் இங்கே ஒரு பொதுக்கூட்டம் நடத்துவோம். மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் விருப்பப்படுகிறார்கள் என்றார்கள் ? நான் அவர்களிடம் சொன்னேன்…. இந்த இயக்கத்தின் ஆணிவேர்கள் நமது நிர்வாகிகள் தான்.
எனவே கிளை கழகம் முழுவதும் மாநில பொறுப்புள்ள அனைத்து நிர்வாகிகளையும் வரச் சொல்லுங்கள். அவர்களுடன் நான் கலந்து உரையாட வேண்டும். அவர்கள் பணியை தொடங்கினால் தான், நம்மால் தேர்தலிலே சாதிக்க முடியும் என்பதை அவர்களிடம் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கூட்டத்தை அவர்களிடம் கூட்ட சொன்னேன்.
நான் தொடர்ந்து நவம்பர் மாதம் இங்கே வருகிறேன், டிசம்பர் மாதமும் வருகிறேன். ஜனவரி மாதத்தில் நாம் இங்கே கூடும்பொழுது இந்த கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து பூத்துகளிலும் உள்ள பூத்து கமிட்டி உறுப்பினர்கள் இருவர் வீதம் நான் அவர்களை நேரடியாக சந்திக்க வருவேன். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
அதன் பிறகு பிப்ரவரி, மார்ச்சலே தேவையான அளவுக்கு ஒரு பூத்துக்கு 10 பேரோ, எத்தனை பேர் தேவையோ அதை அப்பொழுது தீர்மானித்து உங்கள் ஆலோசனைகளை ஏற்று, மற்ற பூத் கமிட்டி உறுப்பினர்களை நாம் நியமனம் செய்யும் பொறுப்பை இப்பொழுது இருந்தே நீங்கள் செய்ய வேண்டும்.
நீங்கள் செயல்பட்டால் தான் இந்த இயக்கம் வெற்றி பெறும். ஏதோ பொதுச்செயலாளர் மாத்திரம் இதை வெற்றி பெறச் செய்ய முடியாது. நான் உங்களோடு சேர்ந்து…. நாம் அனைவரும் ஒற்றுமையாக உழைத்தால் தான் இந்த இயக்கம் வெற்றி பெற முடியும். இப்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலை உங்களுக்கு தெரியும். துரோகத்தாலே…. துரோகத்தை மூலதனமாக கொண்டு… நயவஞ்சகத்தோடு பஞ்ச மகா பாதகம் செய்தவர்கள், இன்னைக்கு படுகுழியில் செல்கின்ற நிலைமையை எட்டிக் கொண்டிருக்கிறார்கள் என எடப்பாடியை விமர்சனம் செய்தார்.