கொடி கம்பம் வைக்கும் விவகாரத்தில் தமிழக பாஜகவினர் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான் , கைது எல்லாம் அரசியல் நடவடிக்கையில் புதுசு இல்லையே. நானே பலமுறை கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளேன். 128 வழக்கு என் மேல இருக்கு. என் கட்சி பிள்ளைகள் எல்லாம் சிறைப்படுத்தப்படுறாங்க. தேர்தல் நேரங்களில் கைது பண்ணி உள்ள வச்சு,  பழிவாங்கிட வேண்டியதுதான். யார் யாரெல்லாம் இயக்கத்தில் இருக்கின்றார்களோ,

அவர்களெல்லாம் நடவடிக்கை எடுத்துக்கிட வேண்டியது தான். தேர்தல் வரும் போது தான ரைடு வருது. திடீர்னு ஜெகத்ரட்சகன் பணக்காரரானாரா? அப்படி எல்லாம் இல்லாம இன்னைக்கு மட்டும் ஏன் வருது ?  தேர்தல் வருது….  இந்த மாதிரி தான் அந்த நடவடிக்கையை  பார்க்கணும், அது ஒன்னும் பிரச்சனை இல்லை. தம்பி விளையாட்டு துறை அமைச்சரா தெரியல… விளையாட்டு அமைச்சரா தெரியுறாரு. இதை போய் என்ன சொல்றது ? அவர் முயற்சிக்கிறார்.  ஏதோ தேர்தல் நேரத்துல,  ஒரு பரபரப்பை உருவாக்கணும் நினைக்கிறாங்க.  எல்லோருமே அதை நோக்கி இயங்குறதுனால…

ஒன்று தான் உங்ககிட்ட  நான் அன்பா சொல்ல விரும்புகிறேன். தேனை வாயில் ஊற்றினால் பயன் இருக்கு, காதுல ஊத்துனா என்ன பயன் இருக்கும் ? அதை ஈ,  எறும்பு தான் வந்து சாப்பிட்டு போகும். அதுக்கு வேணும்னா பையன் இருக்கும். நீங்க பசப்பு, இனிப்பு வார்த்தையிலே பேசுறீங்க…  நாங்க வந்தா ஒழிச்சிடுவோம்ன்னு…

நாங்க வந்தா அதை தந்துருவோம்,  நாங்க வந்தா இதை பண்ணிடுவோம்.. அதை கேட்கும் போது எனக்கு இனிக்குது. ஒரு மயக்கத்திலே இருக்கேன். எங்கள் பாட்டி சொல்லும்…  ராத்திரில பணியாரம் மழை பெய்யும். பணியார  மழை,  பனியாரமா பெய்யுமா ? அப்படின்னு நாங்க நினைச்சுக்கிற மாதிரி…  எங்க கனவுல பணியார  மழை பெய்து அவ்வளவுதான்,  வேற ஒன்னும் இல்ல என தெரிவித்தார்.