திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், யாருக்கு என்ன தேவையோ, அதை பெற்று தாங்கள்… முதியோர் உதவி தொகை, பட்டா மாறுதல் உதவி, இப்படி என்ன உதவி தேவைன்னு கேட்டு,  அதை நிறைவேற்றி தாங்க. இதனை செஞ்சி தருவதற்கு..  அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய ஒன்றிய – நகர – பேரூர் – கழக.

செயலாளர்களையோ – சட்டமன்ற உறுப்பினர்களையோ  அல்லது அமைச்சர்களையோ நீங்க அணுகுங்கள். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கொண்டு வரக்கூடிய கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எல்லோரிடத்திலும்…. குறிப்பாக அமைச்சரிடத்திலே கட்டாயமாக சொல்லுவேன், அதை நீங்கள் நம்ப வேண்டும்.

நீங்கள் கொண்டுவரக்கூடிய தகுதி வாய்ந்த எந்த கோரிக்கைகளாக இருந்தாலும், கட்டாயம்  நிறைவேற்றி தரப்படும் என்ற உறுதியை நான் இங்கே அழுத்தம் திருத்தமாக குறிப்பிட விரும்புகின்றேன். ஒவ்வொரு நாளும் பத்து வீட்டுக்கு போங்க. ஒரு மாசத்துல உங்க பூத்தில் இருக்கக்கூடிய அத்தனை வீட்டிற்கும் போயிட்டு வந்துரலாம். ஒரு சிலர் மகிழ்ச்சியோடு வரவேற்பார்கள், ஒரு சிலரிடத்தில் வரவேற்பு இருக்காது, அதைப்பற்றி கவலைப்படாதீங்க.

தொடர்ந்து போங்க.. திரும்பி திரும்பி போங்க… நம்முடைய சாதனைகளை எடுத்து சொல்லி, புரிய வைங்க. எல்லாருக்கும் பொதுவான மக்களாட்சியை நாம் நடத்திட்டு வருகின்றோம். நம்முடைய திட்டங்களால் இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடும்பமும் ஏதோ உரிய விதத்தில் பயன் அடைந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.