ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேட்டைக்காரன் கோவிலில் இருக்கும் துணை மின் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார் நேற்று துணை மின் நிலையத்தில் இருக்கும் டிரான்ஸ்பார்மரில் பராமரிப்பு பணி நடைபெற்றுள்ளது.

அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று சண்முகத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.