ஈரோடு மாவட்டத்தில் உள்ள நசியனூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி புஞ்சை புளியம்பட்டி பகுதியில் ஆறுமுகம் கூரியர் பார்சல்களை கொடுத்துள்ளார். இதனையடுத்து இரவு புஞ்சை புளியம்பட்டி பேருந்து நிலைய வளாகத்தில் இருக்கும் கழிப்பறைக்கு சென்ற ஆறுமுகம் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

மேலும் செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்டதால் நகராட்சி பணியாளர்கள் கழிப்பறைக்கு சென்று பார்த்த போது ஆறுமுகம் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற ஆறுமுகத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் ஆறுமுகம் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என கூறியுள்ளனர்.