
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ED தன்னிசையான அமைப்பு… அவுங்க மாவட்ட ஆட்சியருக்கு சம்மன் கொடுக்கின்றார்கள் என்றால் , மடியில் கணம் இல்லை என்றால், சம்மனுக்கு பதில் சொல்லிட்டு வர வேண்டியதானே…. ஏன் மாவட்ட ஆட்சியரை காப்பாற்ற நினைக்க வேண்டும்… அதிகாரிகள் ஆட்சியாளர்களின் தவறுக்கு துணை போனால் இப்படி தான். ஆட்சி மாற்றம் ஏற்படும் போது எல்லா பிரச்சனையும் அதிகாரிகளுக்கு அவரு…
நான் மிரட்டவில்லை.ஆட்சி மாற்றம் ஏற்படும் போது அதிகாரிகளுக்கு பிரச்சனை வரும்… அதுக்கு உஷாரா இருக்கணும்… தவறுக்கு துணை போக கூடாது. ஒரு மாவட்டத்துக்கு யார் பொறுப்பு ? ஆட்சி தலைவர் தான் பொறுப்பு ….ஆட்சி தலைவர் கண்ணை மூடிக் கொண்டு இருந்தால்… எப்படி சரியாக வரும் ? நீங்க எவ்வளவு வேண்டுமானாலும் இயற்கையை கொள்ளையடிங்கள்… சூறையாடுங்கள்…. எல்லாம் பண்ணுங்கள்….. இப்போ பாருங்க குடியாத்தம் குமரன்…. 60,000 கோடி ரூபாய் என்னிடம் ஆடியோ இருக்கிறது என்று சொல்லுகிறார்…. யார் சொல்லுகிறார் ?
ஜெயக்குமாரா சொல்லுகிறார்…. எங்கள் கட்சியில் யாராவது சொல்லுகிறா? அவுங்க கட்சியில் இருக்கின்ற துணை செயலாளர்….. அவர் சொல்லுகிறார்…. 60 ஆயிரம் கோடிக்கு ஆதாரம் இருக்கிறது என்று…. அந்த ஆடியோவை வெளியிடுகிறார்…. அது எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு ? ED அதை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்…. ED கையில் எடுத்துக்கொண்டு குடியாத்தம் குமரனை கூப்பிட்டு அந்த ஆடியோ வாங்கிக் கொண்டு… அதுல யார் யார் எல்லாம் சம்பந்தப்பட்டார்கள் என எல்லோரிடமும் ED விசாரிக்க வேண்டும்..
அதேபோல் சென்ட்ரல் ஏஜென்சி சிபிஐயும் விசாரிக்க வேண்டும்… அதுக்கு காரணமானவர் யார் ? துரைமுருகன் சொல்லுகிறார்.. அவரின் மகனை சொல்லுகிறார்… அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டாக வேண்டும் என்பதுதான் எல்லோரின் எதிர்பார்ப்பும்… அதை ED செய்யுமோ அல்லது சிபிஐ செய்யுமா ? அதனால் அந்த மாவட்டங்களில் இப்படி கண்ணை மூடிக்கொண்டு, ஆட்சியாளர்களுக்கு துணைபோய் கொண்டு இயற்கை வளத்தை கொள்ளை அடிக்க வேண்டும் என்று நினைத்தால் அது எப்படி சரியாக வரும் ? மாவட்ட ஆட்சித் தலைவர் தன்னுடைய கடமையை ஒழுங்காக செய்யவில்லை என்பது தான் அர்த்தம்.
ஒருங்கா செய்யவில்லை என்பதை விட, துணை போகிறார் என்பதுதான் அர்த்தம். மாவட்ட ஆட்சியர் தவறு செய்தாரோ, இல்லையோ அது ED விசாரணையில் தெரிய வரும். ஆனால் தவறுக்கு துணை போவது என்பது தவறான விஷயம் தான். அதற்கு பார்த்தீர்கள் என்றால் ? சமன் கொடுத்திருக்கிறார்…. கூப்பிடனும்…. போனால் என்ன நடந்ததோ என்று சொல்லிட்டு போகுங்கள்…. மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் இருக்காது…. யாருக்கும் கிடையாது…. ஆனால் இதுக்கு போய் நீதிமன்றத்திற்கு போயிட்டு, அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால், கண்டிப்பாக நீதிமன்றத்தில் நல்ல நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு கிடைக்காது என்ற நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார்.