
ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தை இயக்கி வந்து விபத்தில் சிக்கி கைதான டிடிஎப் வாசன் youtube சேனலை முடக்க காவல்துறையினர் திட்டம் தீட்டு இருக்கிறார்கள்
காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் இயக்கி விபத்தை ஏற்படுத்தப்பட்ட வழக்கில் பிரபல youtuber டி.டி.எப் வாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. அதனடிப்படையில் தினமும் காவல் நிலையத்தில் டிடிஎஃப் வாசன் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்நிலையில் அவரது youtube சேனலை முடக்க காவல்துறையினர் திட்டமிட்டு இருக்கிறார்கள். காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று டிடிஎஃப் வாசன் யூடியூப் சேனலை முடக்க நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. டிடிஎஃப் ஃவாசனின் youtube சேனலை பார்த்து பல இளைஞர்கள் கெட்டுப் போவதாகவும், அவரது youtube சேனலை முடக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று காவல்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.