
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில், 21 வயதான இளம்பெண் உறவினரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜலேஸ்வர் போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த கிராமத்தில் திருமணமாகி 6 மாதங்களே ஆன அந்த பெண், தனது கணவர் மற்றும் அவரது உறவினருடன் ஆதார் கார்டில் திருத்தம் செய்ய மோட்டார் சைக்கிளில் சந்தைக்கு சென்றிருந்தார்.
அப்போது திரும்பும் வழியில், கணவர் மற்றும் அவரது உறவினர் மதுபானம் அருந்த, அந்த பெண் அருகில் காத்திருந்தார். மதுவுக்கு அடிமையான கணவர் மயக்கத்தில் இருந்த நிலையில், உறவினர் அந்த பெண்ணை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று வன்புணர்வு செய்துவிட்டு தப்பித்து ஓடிவிட்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, உள்ளூர்வாசிகள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சம்பந்தப்பட்ட பெண் காவல்துறையில் முறையாக புகார் அளித்ததை அடுத்து, ஜலேஸ்வர் துணை மண்டல காவல் அலுவலர் “நாங்கள் இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவ பரிசோதனை முடிந்துவிட்டது. இதைத் தொடர்ந்து குற்றவாளி தப்பி ஓடிய நிலையில், அவரை கைது செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனக் கூறினார். மேலும் இந்த சம்பவம் ஒடிசா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,