
சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் வீட்டை காலி செய்துவிட்டு வீட்டு உபயோக பொருட்களான டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் சென்னீர்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் இருந்த இரண்டு டிரைவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த டிரைவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து விபத்துக்குள்ளான சரக்கு வாகனம் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.