சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு பாரதியார் சாலையில் கூலி வேலை பார்க்கும் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் பிரசன்னா(13) நேற்று முன்தினம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வானத்தில் பறந்து வந்த பட்டத்தை பிரசன்னாவும் அவரது நண்பர்களும் பிடிக்க முயன்றனர். இதனையடுத்து ஒரு வீட்டின் மாடியில் பட்டம் இருந்ததை பார்த்ததும் பிரசன்னா பட்டத்தை எடுக்க முயன்றுள்ளார். அந்த பட்டம் அருகில் உள்ள மற்றொரு மாடிக்கு பறந்து சென்றது.

அதனை பிடிக்க அருகில் இருக்கும் மாடிக்கு தாவி குதிக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி பிரசன்னா இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரசன்னா பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.