செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் திமுக வேரோடும், மண்ணோடு சாய்க்கக்கூடிய அளவுக்கு… அவர்களுக்கு படம் புகட்டும் வகையில் ஆயத்தமாக வேண்டும். அதற்காகத்தான் புதிய தமிழகம் கட்சி தமிழகத்தில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி தொடங்கி அனைத்து நாடாளுமன்ற பகுதிகளிலும் நாங்கள் இதுபோல வாக்குச்சாவடி முகவர்கள்,  பயிற்சி முகாமை நடத்த இருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராம சபைகளிலும் அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும் என்று நாங்கள் கிராம சபைகளில் மனு கொடுத்தோம்.

நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இருக்கிறார்கள். கண்டிப்பாக அதனுடைய அடிப்படையில் தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள். அதை வலியுறுத்தி தான் நாங்கள் நாங்கள் டிசம்பர் 15இல்  சிறப்பு மாநாடு நடத்த இருக்கின்றோம். மக்களுடைய கருத்து நிறைய இருக்கு. நீங்க எங்கு போனாலும்… எல்லா கிராமங்களிலும். எல்லா நகரங்களிலும்…

பெண்கள் வேண்டாம்னு சொல்ல கூடியது டாஸ்மாக். அதனால டாஸ்மாக்கை ஒலிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கருத்து. அது தான் நான் பெண்களுடைய உரிமையாக கருதுகின்றேன்.  பெண்கள் தன்னுடைய உரிமையாக கருதுகிறார்கள்.  மதுவில்லா தமிழகம் தான் தமிழக பெண்களுடைய உரிமையாக கருதுகிறார்கள் என தெரிவித்தார்.