சாலையில் செல்லும் போது ஏதாவது ஆபத்து இருந்தால், அதைக் கண்டும் காணாமல் செல்வதே பலரின் வழக்கமாக உள்ளது. ஆனால், இந்தப் பெண்மணி செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. சாலையில் ஒரு சாக்கடை மூடி சரியாகப் பொருந்தாமல் இருந்ததை அவர் கவனித்தார். யாராவது இதில் விழுந்து அடிபட்டு விடுவார்களோ என்று அஞ்சிய அந்தப் பெண்மணி, அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை.
وجت هذه السيدة أن هناك مشكلة في غطاء الصرف فـ لم تغادر حتى قامت بتحذير الاخرين ❤️pic.twitter.com/rDnQIZs1lQ
— Insider Mix (@InsiderMix1) April 26, 2026
அங்கேயே நின்று கொண்டு, அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துக் கொண்டே இருந்தார். “நமக்குத் தேவையில்லாத வேலை” என்று நினைக்காமல், சமூகப் பொறுப்போடு அவர் செய்த இந்தச் செயல் இப்போது பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதிலிருந்து, “இவரைப் போன்ற நல்ல உள்ளங்களால்தான் உலகம் இன்னும் அழகாக இருக்கிறது” என்று நெட்டிசன்கள் தங்களது அன்பைப் பொழிந்து வருகின்றனர்.
