யாருக்கெல்லாம் மகளிர் உரிமை தொகையை கிடைக்கும் என்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற ரேஷன் அட்டையில் மாற்றம் ஏதும் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவரவர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்த அரசு  சார்பில்  தீட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிருக்கான 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கக்கூடிய திட்டம் வரக்கூடிய செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு துரிதப்படுத்தி உள்ளது.

தகுதியானவர்கள் குறித்த வரைமுறைகள் விரைவில் வெளியிடப்பட இருக்கின்றன. இருந்த போதிலும் ஒரு சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

குறிப்பாக ஏழை – எளிய – நடுத்தர குடும்பத்த பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை சென்றடைய வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது.

ஒரு கோடி பெண்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில்,  அதற்கான கணக்கெடுப்பு பணிகளும் தொடங்கி இருக்கிறது.