செந்தில் பாலாஜியை தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்தது, ஆளுநர் பாஜகவைபோல் செயல்படுவதை காட்டுகிறது.  அமலாக்கத்துறையை தனது கிளை அலுவலகம்போல பாஜக மாற்றியதால், தான் எடுத்த முடிவு சரியானது என அவர் கூறியுள்ளார். மாநில அரசு நிர்வாகம் சுமூகமாக செயல்படுவதை அனுமதிக்கக் கூடாது என அவர் செயல்படுகிறார். செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை  நியாயப்படுத்திய முதல்வர் ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டினார்.

அமலாக்கத்துறையை தனது கிளை அலுவலகம் போல் பாஜக மாற்றியதால், தான் எடுத்த முடிவு சரியானது என்றும் ஆளுநர் பதவி தேவையில்லை என்ற திமுகவின் நிலையையும்   உறுதிப்படுத்தினார். மாநில அரசு சுமூகமாக செயல்படுவதை அனுமதிக்க கூடாது என ஆளுநர் செயல்படுகிறார் என விமர்சித்தார்