தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், அறிஞர் அண்ணா அவர்களை பற்றி பேசியதோ,  புரட்சித்தலைவியை பற்றி பேசியது பற்றியோ எடப்பாடி பழனிச்சாமி கவலைப்படவில்லை. எடப்பாடியை 2026 இல் முதலமைச்சராக ஆக ஏற்றுக்கொள்ள வேண்டும் பாஜக என்பதுதான் பிரச்சனை. தன்னை முன்னிலைப்படுத்தி, தான் முதல் மந்திரியாகனும் என்பது தான் அவருக்கு எப்போதுமே பிரச்சனை.

உங்களில் பல பேருக்கு நினைவிருக்கும். ஆட்சியிலே இருந்தபோது செயற்குழு கூட்டம் நடந்தது. அதிலேயே நான் சொன்னேன் எடப்பாடி பழனிச்சாமியை முன்னிலைப்படுத்தாதீர்கள். ஒரு பொலிட் பீரோ மாதிரி கூடுங்கள்.  கட்சியினுடைய கொள்கையை சொல்லுங்கள். புரட்சித் தலைவர் – புரட்சித்தலைவியை மக்களிடத்தே காட்டுங்கள். ஜெயிப்பீர்கள் என்றேன்.

நீங்கள் எடப்பாடி பழனிசாமியை முன்னிலைப்படுத்தி இருந்தால் தோற்ப்பீர்கள் என்று சொன்னேன். எல்லோருமே என்னை சத்தம் போட்டு, என்னை வெளியே போக சொன்னார்கள். நான் வெளியே வந்தேன். என்னாச்சு ? என சொன்ன… உடனே நானும் அதைத்தான் சொன்னேன் என்று டக்குன்னு உள்ளே வந்து  ஓபிஎஸ் சைடில் இருந்து சொல்ல,  என்ன ஆச்சு ? என்ன ஆச்சு ? என்று பண்ருட்டி ராமச்சந்திரன் பேசத் தொடங்கினார்.

இவங்க மறுபடியும் என்னை முன்னிலைப்படுத்த வேண்டும். அதே நோய் தான் இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு. மீண்டும் அவரை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும். அதை தான் டெல்லியில் இருக்கின்ற பாஜக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் அவருக்கு இருக்கக்கூடிய முக்கியமான கோரிக்கை. அதை சொல்லிட்டு அண்ணாவையும்,  புரட்சித்தலைவி அம்மாவையும் சொல்லி திசை திருப்ப பார்க்கிறார்கள் என தெரிவித்தார்.