நெருப்போடு விளையாடாதீர்கள் என தைவானுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளுக்கு சீன பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவானை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவுக்கு தீங்கிழைக்க வேண்டும் என்ற நோக்கில் தைவானுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகள் நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.