ஹோலி பண்டிகை என்றாலே மனிதர்கள் ஒருவருக்கொருவர் வண்ணம் பூசி மகிழ்வது வழக்கம். ஆனால், இப்போது ஒரு கும்பல் காட்டில் உள்ள சிறுத்தைக்கே வண்ணம் பூசி விளையாடியுள்ள பகீர் வீடியோ வெளியாகி இணையவாசிகளிடையே பெரும் குழப்பத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், சில நபர்கள் சேர்ந்து ஒரு சிறுத்தையைச் சூழ்ந்துகொண்டு, அதன் முகம் மற்றும் உடல் முழுவதும் பல வண்ணங்களைப் பூசுகின்றனர். இந்த வீடியோவை பார்த்த பலரும், “மனிதர்களுக்கு அறிவு எங்கே போனது? ஒரு வனவிலங்கிடம் இப்படியா விளையாடுவது?” எனத் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
View this post on Instagram
அதே சமயம், அந்த சிறுத்தை எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாக நிற்பதைப் பார்த்த சிலர், இது நிஜமான சிறுத்தைதானா அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவா என்ற சந்தேகத்தையும் எழுப்பி வருகின்றனர்.
இருப்பினும், விலங்குகளைத் துன்புறுத்துவது போன்ற இதுபோன்ற செயல்கள் ஆபத்தானது என சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.
