என் மண், என் மக்கள்  யாத்திரையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  சகோதர-  சகோதரிகளே…. எந்த காரணத்திற்கும் கூட  திமுக  சொல்லுகின்ற எந்த பொய்யுக்கும் கூடநீங்கள் , செவி சாய்க்காமல், 2024 ஆம் ஆண்டு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கரத்தை வலுப்படுத்த… 400 எம்.பிக்களை தாண்டி நமது பிரதமர் அவர்கள்  வரும்பொழுது…. அதிலே 39 எம்.பிக்கள்நமது பாரதிய ஜனதா கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிக்கள் வர வேண்டும் என்பதையும் சொல்கின்றேன்.

திமுக ஆட்சியில் மின்சார கட்டணத்தை 6 பைசாவில் இருந்து 8 பைசாஆக உயர்த்திய போது இந்த பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் இந்த பகுதியில் இருக்கிறார்கள்….  பெருங்காநல்லூரில் இருந்து ஆரம்பித்தீர்கள் என்றால் ? வரிசையாக இருக்கிறார்கள். அதிலும் ஆத்தூர் சார்ந்த நமது விவசாய பெருமக்களும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் விவசாயிகளின்  தோழன் என்று சொல்கிறார். அதிலும் கூட ஆத்தூரில் இன்னைக்கு அவுங்களுக்கு நினைவு கம்பம் வைத்துள்ளோம்.

அதுவும் திமுகவின் கோரமான ஆட்சியில்  நடைபெற்று இருக்கிறது. சுதந்திர போராட்டத்திற்கு பாடுபட்டதில் ஆத்தூரில் ஏகப்பட்ட பேர் பாடுபட்டுள்ளார்.  சுதந்திரத்திற்க்காக ஆத்தூரில் இருந்து பாடுபட்ட பெரிய பட்டியலே இருக்கிறது. ஆத்தூர் எப்போதும் கூட தேசியத்தின் பக்கம். எப்போதும் கூட  ஆன்மீகத்தின் பக்கம். இந்த முறை தேசியமும், ஆன்மிகமும் இருக்கக்கூடிய நரேந்திர மோடியில் பக்கம்  ஆத்தூர் இருக்கும் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார்.