என் மண் என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்திற்கு கொடுத்த 11 மருத்துவக் கல்லூரியில் அரியலூருக்கும் ஒரு மருத்துவக் கல்லூரி கொடுத்து…. ஒரு பக்கம் நீட் மூலமாக அனைவருமே மருத்துவக் கல்லூரிக்கு செல்ல முடியும் என்கின்ற நிலைமை…..  இன்னொரு பக்கம் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு 9 ஆண்டுகளில்….

மொத்தம் மருத்துவ சீட்டுகள் எவ்வளவு இருந்தது ? 1947 இல் இருந்து 2014 வரை 67 ஆண்டுகளில் மருத்துவ சீட்டுகள் எவ்வளவு இருந்ததோ,  அதை இரட்டிப்பு நம்முடைய பாரத பிரதமர் செய்திருக்கிறார். எப்படி இரட்டிப்பு பண்ணாருங்க ? மருத்துவக் கல்லூரிகளை புதுசாக உருவாக்கி… அரியலூர் உட்பட மாவட்டங்களுக்கு மருத்துவ கல்லூரிகள் அளித்து,

மருத்துவ சீட்டு இரட்டிப்பு செய்து….  ஒரு பக்கம் சீட் அதிகமாகிருச்சு….  இன்னொரு பக்கம் என்ட்ரன்ஸ் எக்ஸாம் மூலமாக அனைவருக்கும் சமமான ஒரு வாய்ப்பை உருவாக்கி…..  நாம் எல்லா ஏழை குழந்தைகளுக்கும் எட்டா கனியாக இருக்க கூடிய…. டொனேஷன் இல்லாம….. கேப்பிடேஷன் பீஸ் எதுவும் கொடுக்காமல்…..

பணத்தை கொடுக்காமல் நேரடியாக மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது, திமுககாரங்க என்ன பண்றாங்க ? அரசு பள்ளியிலே படிக்கக்கூடிய மாணவச் செல்வங்களை பஸ்ஸில் ஏத்திக்கிட்டு போய்  அங்கே  திமுககாரங்க நிக்கிறான். இந்த கையெழுத்து இயக்கம் என்று நடத்துகின்றார்கள் என தெரிவித்தார்.