டிசம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் பார்முலா4 கால்பந்தயம் சென்னை தீவுத்திடலை சுற்றி நடத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். அந்த வழித்தடத்தில் இரண்டு மருத்துவமனைகள், முக்கிய அரசு அலுவலகங்கள்,  முப்படை அலுவலகங்கள்  இருக்கின்றன. எனவே இந்த கார்பந்தயத்தை நகருக்கும் நடத்தக்கூடாது என்று மூன்று வழக்குகள் தொடுக்கப்பட்டது.

அந்த மூன்று வழக்குகளும் நீதிபதிகள் மகாதேவன், ஷபிக் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் இருந்த குற்றசாட்டுக்கள் முன் வைக்கப்பட்ட நிலையில்,  மரங்கள் வெட்டுப்படுவதாகவும்,  பொது மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் மரங்கள் வெட்டுவது தொடர்பாக ஆதாரங்கள் இருக்கின்றதா ? என கேள்வி எழுப்பிய போது,

அரசு தரப்பில்  மரங்கள் ஏதும் வெட்டப்படவில்லை. அவ்வாறு வெட்டுப்பட்டால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இந்த பந்தயத்தை நடத்தாத போது,  தனியார் நிறுவனங்கள்,  அமைப்பு நடத்துகின்றன.  இதற்கு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது ? என்றும்,  இந்த பந்தயத்தை நடத்த  அரசு இவளவு நிதி செலவிடுவதால்  அரசுக்கு வருமானம் வருகிறதா ? என்றும்,

அது தொடர்பாக ஒப்பந்தங்கள் போடப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது ? அப்போது அரசு தரப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், வீரர்களில் பாதிக்கப்பிற்காக காப்பீடுகளும்,  பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும் காப்பீடுகள் எடுக்கப்பட்டதாக அந்த போட்டியை நடத்துகின்ற நிறுவனங்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டன.

அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும்,  காப்பீடு தொடர்பான விவரங்களை  தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். அன்றைய தினம் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படுல் பட்சத்தில் இந்த வழக்கு முடிவுக்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.