தற்பொழுது நிறைய பேர் சொந்தமாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். ஆனால் தொழில் தொடங்க பணம் தேவை. தொழில் தொடங்க அனைவரிடமும் பணம் இருக்காது. இது போன்ற சூழலில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த விஷயத்தில் அரசு மக்களுக்கு உதவி செய்து தொழில் தொடங்க நிதி உதவி வழங்கி வருகிறது. அப்படி யாராவது தொழில் தொடங்க விரும்பினால்பீகார் மாநில  அரசால் 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிக்கலாம். பீகார் மாநில அரசால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தொழில் முனைவோர் திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் தங்களுடைய தொழிலை விரிவுபடுத்த கடன் வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தின் மூலமாக புதிதாக தொழில் தொடங்குவோருக்கு 10 லட்சம் வரை நிதி உதவி அளிக்கிறது. இதற்கு 5 லட்சம் மானியமாக வழங்கப்படும். அதிகபட்சமாக 5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பினால் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.