சுய தொழிலை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பிரதம மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு 10 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்குகிறது. இந்த கடனுதவி விவசாயம் சார்ந்த தொழில் மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். சுயதொழில் தொடங்குவோர் மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் எந்தவித அடமானமும் இல்லாமல் கடன் பெறலாம். இந்த கடனை பன்னிரண்டு மாதங்கள் முதல் ஐந்து வருடங்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.

இந்திய குடிமகனாக இருக்கும் யார் வேண்டுமானாலும் இந்த கடனை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு மத்திய mudra.org.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று எந்த பிரிவுகளின் கீழ் உங்களுக்கு கடன் உதவி வேண்டும் என்பதை தேர்வு செய்து அதில் இருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும். அதன் பிறகு அதில் உள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து உங்களுக்கு அருகில் உள்ள வங்கியில் சென்று கொடுத்தால் கடனுதவி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.