இந்தியாவில் பான் கார்டு என்பது ஒரு முக்கியமான ஆவணமாக இருக்கும் நிலையில் வருமானவரித்துறையால் பான் கார்டு வழங்கப்படுகிறது. இந்த பான் கார்டு வங்கியில் கடன் பெறுவதற்கும், முக்கியமான நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இந்த பான் கார்டு 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தான் வழங்கப்படுகிறது. ஒருவேளை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பான் கார்டு பெற வேண்டும் என்றாலும் கூட பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பான் கார்டு எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

இதற்காக சில நிபந்தனைகள் இருக்கிறது. குழந்தைகளுக்கு பான் கார்டு பெற விண்ணப்பிக்கும் போது ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்காக வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பான் கார்டு பெற வேண்டும் என்றால் அதில் அவர்களுடைய புகைப்படம் மற்றும் கையொப்பம் இருக்காது. அவர்களுக்கு 18 வயது முழுமையாக நிறைவடைந்த பிறகு தான் புகைப்படம் மற்றும் கையொப்பம் பான் கார்டில் இடம்பெறும்.

இந்த புதிய பான் கார்டை பெறுவதற்கு NSDL-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று 49ஏ என்ற படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு அதில் கேட்கும் அனைத்து விதமான ஆவணங்களையும் சமர்ப்பித்த பிறகு, பான் கார்டுக்கு விண்ணப்பிப்பவரின் பிறந்த தினத்தை குறிப்பிட வேண்டும். இதில் பிறந்த தினம் என்பது மிக முக்கியமானது. இந்த புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ரூ. 107 கட்டணமாகும். மேலும் ஆன்லைனில் பான் கார்டுக்கு விண்ணப்பித்த பிறகு சில நாட்களில் உங்கள் வீட்டுக்கே தேடி வரும்.