என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு முழுவதுமே கொத்தடிமைகளாக திமுக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவர்களுக்கு பிறகு அவர்கள் பையன். பையனுக்கு பிறகு அவுங்க பொண்ணு. இங்கு ஆட்சி நடப்பது உங்களுடைய குழந்தைகளுக்காக இல்லை…  உங்களுடைய குழந்தைகள் முன்னேற்றத்திற்காக இல்லை…. அவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்வதற்காக  இங்கு ஆட்சி நடக்கவில்லை…. ஒரே ஒரு குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்.  மகனும், மருமகனும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆட்சி.

ஒரு சின்ன உதாரணம். மனச்சநல்லூர் தொகுதினுடைய எம்எல்ஏ  கதிரவன், உங்களுக்கு தெரியும்.  தனியார் மருத்துவர் கல்லூரி நடத்துகிறாரா ? உங்கள் எம்எல்ஏ ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி நடத்துகிறார். அந்த மருத்துவ கல்லூரியினுடைய பெயர் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரி. உங்கள் எம்எல்ஏவின் உடைய மருத்துவ கல்லூரி அது.

இன்றைக்கு உங்கள் எம்எல்ஏ முதலமைச்சரோடு சேர்ந்து,  தமிழகத்திலே நீட்டு வேண்டாம் என்று சொல்லுகிறார். இவர் நடத்துவது தனியார் மருத்துவக் கல்லூரி. அதில் 2016 நீட் வருவதற்கு முன்பு,  இரண்டு கோடி… மூன்று கோடி… நான்கு கோடி …ஐந்து கோடி என சீட்டு வித்தார்கள். பணக்கார குழந்தைகள் மட்டுமே நீட் வருவதற்கு முன்பு மருத்துவராக முடியும் என்கின்ற  சூழ்நிலை. இன்று இந்த குரூப் எல்லாம் சேர்ந்து..  அரசு பள்ளியில் இருக்கக்கூடிய மாணவச் செல்வங்களை பஸ்ஸை வைத்து கூட்டிக் கொண்டு போய்,  மரத்திற்கு கீழ் நிக்க வைத்து…. நீட்விலக்கு நமக்கு இலக்கு என திமுககாரன் பொய் சொல்லி கையெழுத்து போடுஎன்று சொல்கிறான் என தெரிவித்தார்.