இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரின் பேரில், திருவள்ளூர் நகராட்சி திமுக கவுன்சிலர் பிரபாகரன் நேற்று காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு மற்றும் கட்சி நிர்வாகிகளின் ஒழுக்கமின்மையை கடுமையாக விமர்சித்து வந்தன.

சமூக வலைதளங்களிலும் இந்த விவகாரம் விவாதப் பொருளாகி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய சூழலில், “கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால்” பிரபாகரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அறிவித்துள்ளார்