
செய்தியாளர்களிடம் பேசிய பழ. கருப்பையா, அதிமுக, திமுக இரண்டு பேரும் ஒரே மாதிரியான போக்குடையவர்கள் தான். அதிமுக மீதும் வழக்கு இருக்கும். திமுக மீதும் வழக்கு இருக்கும். ஒருவருக்கொருவர் நெருக்கடி கொடுத்துக் கொள்வதில்லை. எப்படி டாஸ்மாக்கில் டி.ஆர் பாலுக்கு ஒரு கம்பெனி இருக்கிறது. ஜெகத்ரட்சகனுக்கு இருக்கிறது. சசிகலாவுக்கு இருக்கிறது.
சசிகலா திமுக ஆட்சியில் பணம் கொடுக்கிறார். அதிமுக ஆட்சியில் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், மற்றவர்களும் பணம் கொடுக்கிறார்கள். அது அவர்களுக்குள் உள்ள மிகச் சிறந்த புரிதல் ஏற்பாடு. நீயே ஆண்டு கொண்டு இருந்தால் எப்படி ? நான் ஆள வேண்டாமா என்கிற அந்த சண்டை மட்டும் அரசியல் ரீதியாக நடக்குமே தவிர, மற்ற எல்லாவற்றிலும் இவர்கள் தங்கள் தங்கள் காலத்தில் கொள்கை அடிப்பதையே கொள்ளையாக கொண்ட காரணத்தினால் எதிரியை தண்டிப்பதில்லை.
லஞ்சம் வாங்கினால் நாம் பத்தாண்டு சிறையில் இருக்க வேண்டும். நம்முடைய அரசியல் வாழ்வு அழிந்து விடும் என்ற அச்சம் 2003இல் வழக்கு தொடுக்கப்பட்ட செங்கோட்டைனுக்கு இல்லை. நம்முடைய விஜயபாஸ்கருக்கு இல்லை, காமராஜ்க்கு இல்லை, யாருக்கும் இல்லை. அதற்கு காரணம் நம்முடைய ஆட்சி வருகிற போது வழக்கை திருத்திக் கொள்ளலாம்.
ஒரே ஒரு நீதிபதி இவர்களுக்குள் ஊடுரு விட்டால் ? அந்த நீதிபதியின் மீது திமுக செய்தி தொடர்பாளர், போய் ரொம்ப கடுமையாக பேசினாரே… ஏதோ வேண்டும் என்று தேடிப்பிடித்து வழக்ககு போடுகிறார் என்று… நான் சொல்கிறேன் யோக்கியன் மீது வழக்கு போட்டால் நாங்கள் விடுதலை ஆகி வருவோம் என்று சொல்லவில்லை. எங்களை தேர்வு செய்து வழக்கு போடுகிறாய் என்று சொல்கிறாய்… இன்னும் பல பேரின் மீது கிடைக்கக் கிடைக்க போடுவார்கள்.
ஆனால் இது போல நீதி அரசர் ஆனந்த வெங்கடேசன் போல ஒருவர் அமைந்திருப்பது என்பது ரொம்ப அறியது. அவர் மூன்று நாட்களாக நான் தூங்கவில்லை என்றார். அதற்காக அவருடைய ஜாதி எல்லாம் கண்டுபிடித்து திட்டினார்கள். ஆனால் நான் சொல்கிறேன் இந்த முறையை மாற்றுவதற்கு ஒரு நீதிபதி உள்ளே நுழைந்து விட்டாரே என்று ஆதரப்பட்டார்கள். அரசியல் கட்சிகளால் முடியவில்லை என தெரிவித்தார்.