நான்கு சிறுவர்கள் மற்றும் அவர்களின் தாயாருக்கு விரைவாக புகழிடம் வழங்கியதற்காக ஸ்விட்சர்லாந்தை ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் ஆணையம் பாராட்டியுள்ளது. சிரியாவில் இருந்து தப்பி வந்த அந்த தாய் சிறுவயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர். 11 வயதில் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டு 14 வயதில் முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

2017ல் அவர் குடும்பமாக சிரியாவில் இருந்து தப்பி பல்கேரியாவை வந்தடைந்த நிலையில் அங்கு அவர்களுக்கு அமைதி நிலையும் புகலிடமும் வழங்கப்பட்டது. ஆனால் கணவனுடைய கொடுமை தாங்க முடியாமல் அந்த பெண்ணும் அவரது பிள்ளைகளும் தெருவில் பிச்சை எடுக்கும் அவல நிலைக்கு ஆளான நிலையில் ஜெர்மனியிடம் புகலிடம் கோரினார்‌. பின்னர் கணவனுக்கு பயந்து சுவிட்சர்லாந்துக்கு பிள்ளைகளுடன் வந்த அவர் அங்கே புகலிடம் கோரினார்.

அவரது புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட பல்கேரியாவிற்கு நாடு கடத்தும் நிலை ஏற்பட்டதால் ஐநாவின் சிறுவர் உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர் அந்த பெண்ணும் அவரது பிள்ளைகளும். மேல்முறையீட்டைத் தொடர்ந்து அவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் சுவிட்சர்லாந்தில் அகதி நிலை மற்றும் புகலிடமும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.