சிலி நாட்டில் பருவநிலை மாற்றம் காரணமாக கடும் வெப்பம் நிலவி வருகின்றது.மேலும் தொடர்ந்து வெப்பக் காற்று வீசுவதால் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் சிலி நாட்டில் சுமார் 14000 ஹெக்டர் காடுகள் தீயில் கருகி நாசமாகியுள்ளது. மேலும் இந்த காட்டுத்தீயால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் கூறியதாவது “554 பேர் சிறிய காயங்களுடனும் 16 பேர் பலத்த தீக்காயங்களுடனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1429 பேர் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது” என கூறியுள்ளார்.