துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 3:20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குழுங்கி சீட்டுகட்டு போல் சரிந்து பீதியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி சிரியாவின் எல்லை அருகே அமைந்துள்ளதால் சிரியா, லெபனான், இஸ்ரேல் உட்பட அண்டை நாடுகளிலும் இது உணரப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.