செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், சிறையிலே நீண்ட வருடமாக இருக்கின்ற இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் சட்டப்பேரவையி கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான விவாதத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள். அந்த விவாதத்திலே அவர்கள் நீண்ட வருடங்களாக இருபவருடைய வயது,  அவர்களுடைய உடல்நிலை, அவர்களுடைய மனநிலை, அவர்களுடைய குடும்ப நலன் இவற்றை எல்லாம் மனதில் வைத்து கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அந்த விவாதத்திலே பேசினார்கள்.

கோவையிலே 1998இல்  கிட்டத்தட்ட 11 இடங்களுக்கும் மேலாக குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. 58 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள். 200 பேர் கடுமையாக பாதிக்க பட்டர்கள். ஆயிரக்கணக்கான பேர் இன்னும்கூட பாதிப்பிலே இருந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த விவாதம் என்பது சட்டப்பேரவையில் நடந்தது எங்கள் கோவை பகுதியிலே மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.  இறந்து போனவர்களுடைய குடும்பங்களை சார்ந்தவர்களும், இந்த குண்டு வெடிப்பிலே பாதிக்கப்பட்டவர்களும் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளையும்,  எங்களையும் சந்தித்து எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.

தவறு செய்தவர்கள்…  அதுவும் கொடூரமாக தவறு செய்தவர்களை இந்த அரசு தங்களுடைய வாக்குவங்கி அரசியலுக்காக… இந்த நிலைப்பாட்டை எடுத்துவிட கூடாது என்பதை நாங்கள் சட்டப்பேரவையில் வலியுறுத்த வேண்டும் என கேட்டு கொண்டிருக்கார்கள். இந்த சூழ்நிலையில் இன்னொரு முக்கியமான தகவலையும் அவர்கள் சேர்த்தே சொல்லுகிறார்கள். அது எனக்கும் தெரியும். ஒரு சட்டப்பேரவை உறுப்பினராக அந்த தொகுதியில் இருந்து வந்தேன் என்ற காரணத்தினால்,

கடந்த வருடம் அக்டோம்பர் மாதம் இதே மாதம் கோட்டை சங்கமேஷ்வரர் கோவிலுக்கு முன்பாக ஒரு மிக பெரிய  கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது. அதை திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய அரசு அது ஒரு சிலிண்டர் வெடிப்பு விபத்து என இன்று வரை கூறிக் கொண்டிருக்கார்கள். ஆனால் அந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக நடந்த கார் குண்டுவெடிப்பு என்பது திட்டமிடப்பட்ட செயல். இதிலே ISIS தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் ஈடுபட்டிருக்கார்கள் என்பதை தேசிய புலனாய்வு முகமை தன்னுடைய குற்ற பத்திரிக்கையில் குறிப்பிட்டு இருக்காங்க என தெரிவித்தார்.