தமிழகத்தில் பிரபல முன்னணி திரைப்பட நடிகர்கள் நடித்து வெளியாகும் திரைப்படங்களுக்கான ரசிகர் காட்சிகளுக்கு அரசு விதிகள் வகுக்க ஆணையிட கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது..

தமிழகத்தில் பிரபல முன்னணி திரைப்பட நடிகர்கள் நடித்து வெளியாகும் திரைப்படங்களுக்கு திரைப்பட ரசிகர் காட்சிகள் வெளியிடப்படுகிறது. இந்த திரைப்பட ரசிகர் காட்சிகளுக்கு உரிய விதிகள் வகுத்து வரைமுறைப்படுத்தி வெளியிட வேண்டும் என்று உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்தப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விரைவில் விசாரிக்கு வர உள்ளது.

குறிப்பாக சமூக ஆர்வலர் ஐயா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தியேட்டர்கள் இருக்கின்றன. இந்த தியேட்டர்களில் முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வெளியாகும் சினிமா படங்கள் ரிலீஸ் செய்யப்படுகின்றன. இவற்றில் முன்னணி நட்சத்திர கதாநாயகர் நடித்த சினிமா படங்கள் வெளி வரும்போது ரசிகர்கள் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இதன் காரணமாக தியேட்டருக்குள் ரகளையில் ஈடுபடும் ரசிகர்கள் அங்குள்ள இருக்கைகள் திரைச்சீலைகளை சேதப்படுத்தி அங்கே இருக்கக்கூடியவர்களுக்கு காயங்கள் ஏற்படுகின்றது.

இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் இளம் சமுதாயம் எதிர்காலத்தில் பல்வேறு இன்னல்களை சந்திக்கக்கூடிய அவலங்கள் எல்லாம் இருக்கிறது. எனவே புதிய படம் வெளியிடும்போது, அதாவது ரசிகர்களால் சிறப்பு காட்சி ஆகியவற்றின் போது பொதுமக்கள் பாதுகாக்கப்படும் வகையில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அந்த தியேட்டர்களில் புதிய பட டிரைலர் வெளியிடும்போது மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும்.

மேலும் ரசிகர் காட்சியின் போது வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களால் உயிரிழப்பு மற்றும் பிற உயிர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுகிறது. எனவே இது போன்ற காட்சிகள் வெளியாகும் போது அரசு அதற்கான உரிய விதிகளை வகுத்து வரைமுறைப்படுத்தி வெளியிட வேண்டுமென தன்னுடைய மனுவில் தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் யுடியூபர் டிடிஎஃப் வாசனின் செயலை கடுமையாக நீதிமன்றம் விமர்சித்திருந்தது.. காரணம் அவருடைய செயல் இளம்தலைமுறையினை கெடுத்து இளைஞர்கள் உயிருக்கு ஆபத்து அச்சுறுத்தல் ஏற்படுவதாக இருந்தது. எனவே இது போன்ற பாதிப்புகள் இல்லாத வகையில் தியேட்டர்களில் உரிய கட்டுப்பாடுகளை கொண்டு வர நீதிமன்றம் தலையிட வேண்டும், உத்தரவிடவேண்டும் என தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு திங்கள்கிழமை – செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வர இருக்கிறது..