செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  சட்டப்பேரவையில் மாண்புமிகு பேரவை தலைவர் இடத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் நியமனம் குறித்தும்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கியது குறித்தும்,

பலமுறை மாண்புமிகு பேரவை தலைவரை சந்தித்து எங்களுடைய மூத்த சட்ட மன்ற உறுப்பினர்கள் கடிதம் கொடுத்தும் அவர் அதற்கு உண்டான தீர்வை காணாத காரணத்தினால் அது குறித்து சட்ட மன்றத்தில் அவருடைய கவனத்திற்கு கொண்டு வந்தோம். கிட்டத்தட்ட 10 முறை சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் நியமனம் குறித்தும்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து மூன்று பேர் நீக்கப்பட்டது குறித்தும் 10 முறை சட்ட பேரவை தலைவர் அறையில் கடிதம் கொடுத்து இருக்கின்றோம் .

19.7.2022 அன்று துணை தலைவர் நியமனம் குறித்து கடிதம் கொடுத்து இருக்கின்றோம். அதேபோல 11.10.2022 அன்று கடிதம்  கொடுத்து இருக்கின்றோம். நினைவூட்டு கடிதம் 14.10.2022 அன்று கொடுத்து இருக்கின்றோம். நினைவூட்டு கடிதம் 18.10.2022 அன்று கொடுத்து இருக்கின்றோம். நினைவூட்டு கடிதம் 10.1.2023 அன்று கொடுத்து இருக்கின்றோம். அதுமட்டுமல்லாமல் உயர்நிதி மன்றத்தினுடைய தீர்ப்பினுடைய நகலை 23.2.2023 அன்று சட்டப்பேரவை தலைவருடைய அறையில் சட்டபேரவை தலைவர் இடத்தில் சமர்ப்பித்து இருக்கிறோம்.

அதோடு 28.3.2023 அன்று தேதியிட்ட சென்னை உயர்நீதி மன்றதினுடைய தீர்ப்பு நகலையும் அவர்கள் இடத்தில் வழங்கி இருக்கின்றோம். 25.8.2023 அன்று சென்னை உயர்நீதி மன்றதினுடைய தீர்ப்பு நகலையும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவரிடத்திலே கொடுத்து இருக்கின்றோம். 21.9.2023 அன்று நினைவூட்டு கடிதத்தை கொடுத்து இருக்கின்றோம். 9.10.2022 அன்றும் மீண்டும் ஒரு நினைவூட்டும் கடிதத்தை கொடுத்து இருக்கின்றோம்.

இந்த 10 கடிதங்கள் கொடுக்கப்படும் கூட நாங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்ற படாததற்கான காரணத்தை தெளிவு படுத்த வேண்டும் என்று எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள்,  கொரடா,  மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் நேரடியாக சென்று சட்டப்பேரவை தலைவரிடத்திலே கேட்டபோது கூட அதற்கு தகுந்த பதில் அளிக்கப்படவில்லை.  இதுகுறித்து நான் சட்டமன்றத்தில் பேசினேன்,  நீங்கள் முழுமையாக பேசுவதற்கு அவருக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என பேசினார்.